Saturday, 5 July 2014
Friday, 4 July 2014
Kovilpatti
பேருந்து நிலையத்தில் விமானம்!!
பொதுமக்களின் பார்வையில் அந்த ஓவியங்களைப் பார்த்தால் ஆச்சரியம் தான் ! அவர்கள் பார்க்கும் பார்வையில் இருந்து சற்றே விலகி வேறு ஒரு கோணத்தில் பார்த்தால் அந்த ஓவியங்கள் வேறு ஒரு அர்த்தத்தை தருகிறது. ஆம்! சுற்றுப்புறத்தை இப்படியும் பாதுகாக்கலாம் என்ற ஐடியாவுக்கு ஒரு ஓ போடலாம். கோவில்பட்டியையே புள்ளிகளும் கோடுகளும் வண்ணங்களுமாக மாற்றி விட்டது.
இந்த ஐடியாவின் பின்புலம் அல்லது ரிஷிமூலம் என்று கேட்டபோது கிடைத்த தகவல்கள் கிடைத்தன. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சென்னையில் வணிக வளாகங்கள் பெருகிய நேரம். வணிக வளாகத்தின் படிகளில் பான்பராக் எச்சில் சிதறல்களும் வணிகவளாகத்தின் சுற்றுசுவர்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்கவும் வளாக கடைகாரர்கள் ஜெபி கண்ணா வெளியிட்ட சாமிப்படங்களை ஒட்ட ஆரம்பித்தனர். சிலர் சில ஓவியர்களைக் கொண்டு இறைஉருவங்களை வரைந்து வைத்தனர். இது ஒரு வகையில் கைமேல் பயன் தந்தது. பான் பராக் எச்சலை தெறித்தலும் சிறுநீர் கழிப்பும் குறைந்தது. இந்த வழிமுறையை எழில்மிகு சென்னையாக மாற்ற அரசு முனைந்தபோது, சென்னை மாநகராட்சி சென்னையிலுள்ள பொதுநிர்வாக வளாகங்களில் சுவர்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளையும் தவிர்க்க கையாண்டது. அரசு கவின்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களையும் இணைத்துக் கொண்டு அரசு சுவர்களில் எல்லாம் தமிழர் பண்பாட்டை விளக்கும் நல்ல ஓவியங்களை வரைய வைத்தது. அதுவும் நல்ல பயனை நல்கியது. அதே பார்மூலாவை எல்லா நகராட்சிமன்றங்களும் இப்போது கையில் எடுத்திருப்பது நல்லமுடிவு. இதன் விளைவாக திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவில்பட்டி போன்ற ஊர்களில் லயன் கிளப் போன்றவைகளுடன் இணைந்து எல்லா நகராட்சிகளிலும் பொது சுவர்களில் ஓவியங்களைத் தீட்டிவருகிறார்கள் சென்னை ஓவியர்கள்.
கோவில்பட்டியில் அப்படிப்பட்ட கலைஞர்கள் வருகை தந்து நகரை அழகுசெய்தபோது அவர்களிடம் கொஞ்சம் பேசினேன். சென்னையிலுள்ள ஒரு காண்ட்ராக்டர் கீழ் அவர்கள் வேலைசெய்பவர்கள். ஒரு காலத்தில் சென்னை சினிமாகம்பெனிகளின் பேனர் வேலைகளை எடுத்து செய்தவர்கள். பல்லாண்டு இத்தொழிலில் உள்ளவர்கள். பிளக்ஸ்பேனர்களாக சினிமா பேனர்கள் உருமாறியபின் இவர்களின் வாழ்வாதாரம் சீரழிந்தது. பிழைப்பு அற்று போன இவர்கள் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செல்வதை தவிர வேறு வேலைகள் இல்லை. ஆனால் இந்த திட்டம் வந்ததும் இவர்கள் கூலி குறைவு என்றாலும் மனநிறைவுடன் வேலை செய்ய ஒப்புக் கொண்டு பல ஊர்களின் அரசு சுவர்களை அழகாக்கி வருகின்றனர். கீழே அந்த ஓவியர்கள் தீட்டிய சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்கு..
Labels:
Wall Paintings
Location:
Kovilpatti, Tamil Nadu, India
Subscribe to:
Posts (Atom)