ஓர்அணா டவுசரிலிருந்து வளர்ந்த புகைப்பட காதலன்,
என் ஆசானை பற்றி சில வரிகள் ......
வறுமையின் பிடியிலிருந்த என் ஆசானுக்கு அப்போது வயது பதிமூன்று
திரு.கோமதிநாயகம் அவர்களிடம் வேலைக்கு சேர்ந்து புகைப்படம் எடுக்க
கற்றுக்கொண்ட ஆண்டு 1953 டிசம்பர் 7 அமாவாசையன்று, மதியம் இரண்டு மணி.
புகைப்படம் எடுக்க மிக முக்கியமான மூன்று ஒளியை கையாளும் விதம் , கோணம் , அதோடு தருணத்தையும் கற்றுக்கொண்டார்..
ஆனால் இதனை கற்றுக்கொடுத்த அவறது குருவிற்கோ பார்வைகிடையாது!!! ஆச்சரியம்தான் ....
''தன் அம்மா வாங்கித்தந்த ஓர்அணா வெள்ளை டவுசர் எனக்கு வெள்ளை அடையாளத்தை தந்ததாக ஆசான் கூறிார்''
தன் பதிமூன்று வயதில் கேமராைவை தூக்கிய என் ஆசானிற்கு இப்போது வயது 75.
|